Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பிரான்ஸ் போராட்டத்தில் தீவைப்பு: 143 ஆண்டு நகராட்சி கட்டிடம் சேதம்

பிரான்ஸ் போராட்டத்தில் தீவைப்பு: 143 ஆண்டு நகராட்சி கட்டிடம் சேதம்

வேகமாகப் பரவிய தீயால் கட்டிடத்தின் மேற்கூரை கீழ்தளங்கள் மீது இடிந்து விழுந்தது.

பகிரவும் WhatsApp Facebook

பிரான்ஸில் விலைவாசி உயர்வுக்கு எதிரான போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில், லிமோஜ் நகரின் 143 ஆண்டுகள் பழமையான நகராட்சி கட்டிடத்துக்குத் தீ வைக்கப்பட்டது. இதில் கட்டிடத்தின் பெரும்பகுதி சேதமடைந்தது.

பிரான்ஸின் பல்வேறு நகரங்களில் நேற்று முன்தினம் நடைபெற்ற விலைவாசி உயர்வுக்கு எதிரான போராட்டங்களில் மாணவர்கள், தொழிற்சங்கத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சில இடங்களில் போராட்டங்கள் வன்முறையாக மாறின. லிமோஜ் நகரிலும் மோதல் ஏற்பட்டது. நகராட்சி அலுவலகத்துக்கு வெளியே காவல் வாகனத்துக்குத் தீவைத்த முகமூடி அணிந்த சிலர், பின்னர் ஜன்னல்களை உடைத்து கட்டிடத்துக்குள் நுழைந்து தீவைத்ததாகச் சம்பவத்தைப் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

வேகமாகப் பரவிய தீயால் கட்டிடத்தின் மேற்கூரை கீழ்தளங்கள் மீது இடிந்து விழுந்தது. மணிக்கோபுரமும் சரிந்தது. இந்தக் காட்சிகள் வெளியாகி, வரலாற்றுக் கட்டிடத்துக்கு ஏற்பட்ட பெரும் பாதிப்பை வெளிப்படுத்தின. “மேற்குப் பகுதியைத் தவிர மேற்கூரை இடிந்துவிட்டது. முகப்பின் மூன்றில் இரண்டு பகுதி அழிந்துவிட்டது” என்று மாகாண நிர்வாக அதிகாரி மோரிஸ் பாரட் தெரிவித்தார். இதைப் பாரம்பரியப் பேரிழப்பு எனக் குறிப்பிட்டார்.

தீவைக்கப்பட்டபோது உள்ளாட்சிப் பிரதிநிதிகள், நகராட்சிக் காவலர்கள், ஊழியர்கள் ஆகியோர் கட்டிடத்துக்குள் இருந்தனர். எனினும், அவர்களில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவத்துக்கு அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பலத்த காற்று வீசியதால் தீயைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டதாக மேயர் கியோம் கெரான் தெரிவித்தார். திருமணப் பதிவு அரங்கும், குடிமக்கள் பதிவுப் பிரிவும் தீயில் சேதமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1883-ல் திறக்கப்பட்ட இந்தக் கட்டிடம், பாரிஸ் நகராட்சி அலுவலகக் கட்டிடத்தை முன்மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. நகரின் அடையாளமாக விளங்கிய கட்டிடம் எரிவதை நூற்றுக்கணக்கான மக்கள் வேதனையுடன் பார்த்தனர். தீயணைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றன; சேதத்தின் முழு அளவு மதிப்பிடப்பட்டு வருகிறது.

முந்தைய செய்தி
திருமண விழாக்களில் பிரபலமாகும் மெஹந்தி அலங்காரம்
அடுத்த செய்தி
FSIB மறுசீரமைப்பு: புதிய தலைவராக SCL.தாஸ் நியமனம்

தொடர்புடைய செய்திகள்